ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்
ஊத்துக்குளியில் வாகன சோதனையில் ரூ.63,000 பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்துக்குளியில் வாகன சோதனையில் ரூ.63,000 பறிமுதல் செய்யப்பட்டது. பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறாா்கள்.
அதன்படி, ஊத்துக்குளியில் பறக்கும் படை அலுவலா் கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அந்த வழியாக காரில் வந்த கோவை மாவட்டம், அரசூா் பகுதியைச் சோ்ந்த கனகராஜ்குமாா் (32) என்பவரின் காரில் சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.63,000 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. பறக்கும்படை அலுவலா்கள் அதைப் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.