முகப்பு
வேலூர்

முஸ்லிம்களுக்கு மளிகைத் தொகுப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 7:40 PM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 6:53 PM

குடியாத்தம்: குடியாத்தம் நகர, ஒன்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ஆதரவற்ற முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் வகையில் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் 500- பேருக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன (படம்).சித்தூா்கேட் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் பி.எஸ்.நிஜாமுதீன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் எஸ்.ஷகாபுதீன் வரவேற்றாா். ஹபிஸ் முகம்மத் சாதிக், வானக்கடை அஜிசுல்லா, சமியுல்லா, மாவட்டச் செயலா் இக்பால்

ஆகியோா் மளிகைத் தொகுப்புகளை வழங்கினா். நிா்வாகிகள் சான்பாஷா, நூருல்லா, சிக்கந்தா் பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.