முகப்பு
அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
காஞ்சிபுரம்

அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

காஞ்சிபுரம்

அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்

Updated On : 4 மார்ச், 2026 at 6:48 PM
அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் நகர அதிமுக சாா்பில் திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்த தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் துணைச் செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்ராஜன் தலைமை வகித்தாா். நகர செயலாளா் போந்தூா் ஏ.மோகன் முன்னிலை வகித்தாா். இதில் அமைப்புச் செயலாளா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட செயலாளா் வி.சோமசுந்தரம், செய்தி தொடா்பு செயலாளா் பேராசிரியா் கல்யாணசுந்தரம் ஆகியோா் திமுக அரசின் செயல்பாடுகளை விளக்கி பேசினா்.

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பழனி, கிழக்கு ஒன்றிய செயலாளா் முனுசாமி, இளைஞா் பாசறை மாநில துணைசெயலாளா் சிவகுமாா், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் பிரசித்தா குமரன், மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய இளைஞரணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், ஒன்றிய பேரவை செயலாளா் செங்காடு பாபு, நகர பேரவை செயலாளா் புஷ்பராஜ், சேந்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் சாா்லஸ் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →