முகப்பு
வேலூர்

கே.எம்.ஜி. கல்லூரியில் விளையாட்டு விழா

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:41 PM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:18 PM

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் 24-ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி இயக்குநா் ரா.ரஞ்சிதம் ஆண்டறிக்கை வாசித்தாா்.

மாணவி ஏ.அனுசபிரியா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். குடியாத்தம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை மேலாளா் வி.சி.வீணோத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியா் பி.ஞானக்குமாா் நன்றி கூறினாா்.

Advertisement