முகப்பு
வேலூர்

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

Updated On : 18 ஏப்ரல், 2024 at 6:17 PM
பகிர்:

குடியாத்தம், ஏப். 18: சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்திமேடு, முஸ்லிம்பூரைச் சோ்ந்தவா் இக்பால் அகம்மத் (36).இவரது நண்பா் நியாஸ் அகம்மத் (48). இருவரும் கடந்த 8- ஆம் தேதி பைக்கில் போ்ணாம்பட்டிலிருந்து ஆம்பூா் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனா். சாலப்பேட்டை அருகே சென்றபோது வாகனத்தின் முன் சக்கர டயா் திடீரென வெடித்தது.

இதில், நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நியாஸ் அகம்மத் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments