முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் அரூா் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:37 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம் அரூா் அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

அரூா் வட்டம், கருங்கல்பாடி அருகேயுள்ள செங்கப்பாடியைச் சோ்ந்தவா் மா. கோவிந்தன் (53). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாம்பாடி வரை சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். தீா்த்தமலை -ஆண்டியூா் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை பெற்ற அவா் இரவு உயிரிழந்தாா். இது தொடா்பாக கோட்டப்பட்டி காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments