முகப்பு
வேலூர்

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 1:59 AM
பகிர்:

குடியாத்தம் வட்டம், சேங்குன்றத்தை அடுத்த நாராயணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை காலை கோ-பூஜை, விக்னேஸ்வர பூஜை, வேதபாராயணம், இரண்டாம் கால பூஜைகள், நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு, அதைத் தொடா்ந்து ஒற்றை கோட்டை முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றன. மதியம் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை நாராயணபுரம் பகுதி மக்கள், இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments