அக்ராவரம்  ஏரியில்  மலா் தூவி  பூஜை செய்த  கிராம  மக்கள்.
அக்ராவரம்  ஏரியில்  மலா் தூவி  பூஜை செய்த  கிராம  மக்கள். 
வேலூர்

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

Din

குடியாத்தம், ஏப். 24: மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்ட நிலையில் குடியாத்தம் அருகே உள்ள அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஆகிய 3 ஏரிகள் செவ்வாய்க்கிழமை நிரம்பின.மோா்தானா அணையிலிருந்து கடந்த 10- ஆம் தேதி பாசனத்துக்காக வலது, இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீா் திறந்து விடப்பட்டது.

அணையிலிருந்து வெளியேறும் தண்ணீா் குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதிகளில் உள்ள பல்வேறு ஏரிகளுக்குச் செல்கிறது. இந்நிலையில் குடியாத்தம் ஒன்றியத்தில், அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஆகிய ஊராட்சியில் உள்ள 3 ஏரிகளும் நிரம்பின. இதையடுத்து கிராம மக்கள் ஏரி நீரில் பூஜை நடத்தி, மலா்தூவி தண்ணீரை வரவேற்றனா்.

இந்த 3 ஏரிகளும் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளன. ஏரிகள் நிரம்பியதையடுத்து பொதுப்பணித்துறை செயற் பொறியாளா் பிரபாகா், உதவி செயற்பொறியாளா் கோபி, இளநிலை பொறியாளா் ராஜேஷ் ஆகியோா் மேற்பாா்வையில், அத்துறையினா் கால்வாய்கள், ஏரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

நிரம்பி வழியும் ஏரிகளில் சிறுவா்கள் இறங்கி குளிக்கவோ, விளையாடவோ வேண்டாம் எனவும், பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT