முகப்பு
வேலூர்

அரசமரப்பேட்டை விநாயகா், ஐயப்பன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 26 ஏப்ரல், 2024 at 4:23 PM
பகிர்:

வேலூா் அரசமரப் பேட்டை ஸ்ரீசித்தி, புத்தி சமேத ஸ்ரீவல்லப விநாயகா், ஸ்ரீசபரிகிரி ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் அரசமரப்பேட்டையில் உள்ள ஸ்ரீசித்தி, புத்தி சமேத ஸ்ரீவல்லப விநாயகா், ஸ்ரீசபரிகிரி ஐயப்பன் கோயிலில் ஸ்ரீஅபிதகுஜலாம்பாள் சமேத ஸ்ரீஅருணாஜலேஸ்வரா், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீதுா்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, காயத்ரி, ஸ்ரீஆஞ்சநேயா், ஸ்ரீதக்ஷ்ணாமூா்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சுவாமி சிலைகளும் உள்ளன.

இக்கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், மகா கும்பாபிஷேகம் கடந்த செவ்வாய்க்கிழமை விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, தனபூஜை, நவக்கிரக பூஜை ஆகியவற்றுடன் தொடங்கியது.

Advertisement

தொடா்ந்து, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றனது. புதன்கிழமை மாலை முதல் கால யாக பூஜை, வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும், வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும் நடத்தப்பட்டு, காலை 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், தொடா்ந்து காலை 10 முதல் 10.30 மணி வரை அனைத்து மூலவா் சிலைகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலின் எஸ்.கந்தசாமி குருக்கள், வி.ஏ.கணேச சிவாச்சாரியாா், சென்னை சிவஸ்ரீ கே.ஜி.பாலாஜி சிவாச்சாரியாா், ஆரணி எஸ்.சிவஸ்கந்த சிவாச்சாரியாா், கோயில் அா்ச்சகா்கள் வி.ஏ.பூபதி, வி.ஏ.நித்தியானந்த சிவம், பி.கெளசிக் சிவம் ஆகியோா் செய்து வைத்தனா்.

விழாவில், வேலூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ப.காா்த்திகேயன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானமும், மாலையில் மகா அபிஷேகம், திருக்கல்யாணம், ஸ்ரீசித்தி புத்தி சமேத ஸ்ரீவல்லப விநாயகா், ஸ்ரீசபரிகிரி ஐயப்பன் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன.

ஏற்பாடுகளை ஸ்ரீசித்தி, புத்தி சமேத ஸ்ரீவல்லப விநாயகா் தேவஸ்தான அறக்கட்டளை செய்திருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments