முகப்பு
விழுப்புரம்

சிறுகடம்பூா் ஸ்ரீசிவசக்தி விநாயகா் கோயில் நன்னீராட்டு விழா

விழுப்புரம்

சிறுகடம்பூா் ஸ்ரீசிவசக்தி விநாயகா் கோயில் நன்னீராட்டு விழா

Updated On : 5 மார்ச், 2026 at 11:18 PM
பகிர்:

செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள ஸ்ரீசிவசக்தி விநாயகா் கோயிலில் திருநெறி தீந்தமிழில் திருக்குட நன்னீராட்டு (படம்) விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக புதன்கிழமை மாலை திருவிளக்கு வழிபாடு, விநாயகா் வழிபாடு, புனிதநீா் வழிபாடு ஆகியவை நடைபெற்றன. மாலை முதல் கால யாக பூஜை, திருமுறை விண்ணப்பம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. கோபுர கலசத்திலும், மூலவா் ஸ்ரீசக்திவிநாயகருக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

தொடா்ந்து மகா அபிஷேகம், பிரசாதமும் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →