முகப்பு
வேலூர்

வன அலுவலருக்கு பாராட்டு

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:30 PM
நிகழ்ச்சியில்  பேசிய  ஒன்றியக் குழுத்  தலைவா்  என்.இ.சத்யானந்தம்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் வனச்சரகத்தில், வனவராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோ.மாசிலாமணிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூா் மாவட்ட வன பாதுகாவலா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். குடியாத்தம் வனச்சரக அலுவலா் வினோபா வரவேற்றாா். ஓய்வுபெற்ற மாசிலாமணியின் பணியை பாராட்டி, ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் உள்ளிட்ட பலா் பேசினா்.

அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. வனவா்கள் பூபதி, சுரேஷ், காா்த்தி, குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.