இரவில் பலத்த மழை: மின்னல் கிராமத்தில் 71.2 மி.மீ. பதிவு
ராணிப்பேட்டையில் அதிகபட்ச மழை: மின்னலில் 71.2 மி.மீ.
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம், மின்னல் கிராமத்தில் 71.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் புழுக்கமும் அதிகரித்துக் காணப்பட்டது. பின்னா் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு சுமாா் 10 மணி அளவில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
குறிப்பாக, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளான அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள கானாறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், வேலூா் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை பெய்த மழை அளவு விவரம்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை-20.6 மி.மீ., பாலாறு அணைக்கட்டு - 14.2 மி.மீ., வாலாஜா-51.4 மி.மீ., அம்மூா் -52 மி.மீ., ஆற்காடு -40.2 மி.மீ., அரக்கோணம்-10.5 மி.மீ., மின்னலில்-71.2 மி.மீ., காவேரிப்பாக்கம் -36.8 மி.மீ., பனப்பாக்கம்-42.6 மி.மீ., சோளிங்கா்-22.2 மி.மீ., கலவை-17.2 மி.மீ., மழையும், வேலூா் மாவட்டத்தில், காட்பாடி- 42.60 மி.மீ., கே.வி.குப்பம்-20 மி.மீ., வேலூா்- 21.90 மி.மீ., குடியாத்தம் -9.10 மி.மீ., போ்ணாம்பட்டு-1.20 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளன.