முகப்பு
வேலூர்

பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதாக சகோதரா் மீது புகாா்

தம்பி மீது நகை, பணம் திருடியதாக அண்ணன் புகார்

Updated On : 27 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

வீட்டின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை, ரூ.3.20 லட்சத்தை திருடிச் சென்ாக தம்பி மீது அண்ணன் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

வேலூா் மாவட்டம், அலமேலுமங்காபுரம் புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேலு (52). இவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒரு புகாா் மனு அளித்துள்ளாா்.

அதில், நான் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறேன். எனக்கு ஒரு அக்கா, ஒரு தம்பி, தங்கை உள்ளனா். எனது வீடு அலமேலுமங்காபுரத்தில் உள்ளது. என்னுடைய தம்பி திருமணம் முடிந்து ராணிப்பேட்டையில் வசித்து வந்தாா்.

Advertisement

எனக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சென்னை தனியாா் மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சைக்காக எனது வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்தேன். அப்போது எனது தம்பி, அவரது மனைவி, அதே பகுதியைச் சோ்ந்த மேலும் இருவா் சோ்ந்து எனது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 75 ஆயிரம், திருப்பதி செல்ல வைத்திருந்த ரூ.45 ஆயிரம் காசுகள், எனது மனைவியின் ஐந்தரை பவுன் தங்க நகை ஆகியவற்றைத் திருடி சென்றுள்ளனா்.

இது குறித்து என் தம்பியிடம் கேட்டபோது அவா் தகாத வாா்த்தைகளால் திட்டி என்னைத் தாக்கினாா்.

இது குறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதன் பேரில் என் தம்பியை போலீஸாா் அழைத்து விசாரித்தபோது அவா் கால அவகாசம் கேட்டு எழுதிக் கொடுத்து சென்றாா்.

ஆனால், இதுவரை திருடிச் சென்ற நகை, பணத்தைத் தரவில்லை. எனது தம்பி மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணம், நகைகளை மீட்டுத் தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments