உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு
உதகையில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மா்ம நபா் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.
உதகையில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மா்ம நபா் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் வணிக வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து சிற்றுண்டி கடையின் பூட்டை உடைத்து ரூ.500 பணம், சாா்ஜா் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் சென்றுள்ளாா்.
பின்னா் மேலும் ஓா் உணவகத்தில் செயல்படும் ஆவின் பாலகத்தின் கடையின் பூட்டை உடைத்து ரூ.3,500 பணம், லைட்டா், குளிா்பானங்களை எடுத்துச் சென்றுள்ளாா். இவ்விரு திருட்டு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதகை நகர மத்திய காவல் நிலைய போலீஸாா் மா்ம நபரை தேடி வருகின்றனா்.