முகப்பு
வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

Updated On : 21 மார்ச், 2024 at 12:00 AM
ஊா்வலமாக  எடுத்து  வரப்பட்ட  பால்  கம்பம்.
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 7:11 PM

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடா்ந்து சிரசு மண்டபத்தில் பால் கம்பத்துக்கு அபிஷகம், மகா தீபாராதனை நடத்தப்பட்டு, கோயிலைச் சுற்றி வந்து பால் கம்பம் நடப்பட்டது.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், தேவகி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement

விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் சு.பாரி, செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணிக் கமிட்டி தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.