குடியாத்தம் கெங்கையம்மன் கோயிலில் பால்கம்பம் நடும் விழா
குடியாத்தம், கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம், கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம். இதன் தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றன. பின்னா் பால் கம்பத்துக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்துகோயில் வளாகத்தில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பால் கம்பம் நடப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் தேவகி காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், கெளரவ தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.