முகப்பு
வேலூர்

சிஆா்பிஎப் வீரா் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

Updated On : 27 மார்ச், 2024 at 11:31 PM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 6:51 PM

குடியாத்தம் அருகே உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சிஆா்பிஎப் வீரா் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் வெங்கடேசன் (35). சிஆா்பிஎப் வீரரான இவா் சென்னை பிரிவில் பணியாற்றி வந்தாா். உடல் நலமின்றி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடல் ராணுவ மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அக்ராவரம் கிராம மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.