அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
மாநில அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லேவின் உடல் தகனம் செய்யப்பட்டது குறித்து...
மாநில அரசின் முழு மரியாதையுடன் ஆஷா போஸ்லேவின் உடல் திங்கள்கிழமை (ஏப்.13) தகனம் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) காலமானார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் திரையுலகம் சார்ந்த பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என ஆஷா போஸ்லேவின் மகன் ஆனந்த் போஸ்லே தெரிவித்திருந்தார்.
அதன்படி, மாநில அரசின் முழு மரியாதையுடன் ஆஷா போஸ்லேவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த இறுதிச்சடங்கில் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். அவருக்கு இறுதி விடை கொடுக்க, நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வெளியே பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.
பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தார். மேலும், பத்ம விபூஷன், தாதாசாகேப் பால்கே விருது, மற்றும் மகாராஷ்டிர பூஷன் விருது போன்ற உயரிய விருதுகளை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Asha Bhosle's mortal remains were cremated on Monday (April 13) with full state honors.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.