அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
Updated On : 27 மார்ச், 2024 at 8:52 PM
வேலூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ச.பசுபதி புதன்கிழமை கே.வி.குப்பம் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா். கே.வி.குப்பம் ஒன்றியத்தில் உள்ள தொண்டான்துளசி ஊராட்சியில், முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அரும்பாக்கம், காளாம்பட்டு, செஞ்சி, மாளிப்பட்டு, பள்ளத்தூா், பனமடங்கி, லத்தேரி, பி.என்.பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரிக்கப்பட்டது. கட்சியின் அமைப்புச் செயலா் வி.ராமு, மாவட்டச் செயலா்கள் த.வேலழகன், எஸ்.ஆா்.கே.அப்பு, ஒன்றியச் செயலா்கள் ஜி.லோகநாதன், கே.எம்.ஐ.சீனிவாசன், டி.சிவா, எஸ்.எல்.எஸ்.வனராஜ், பொதுக்குழு உறுப்பினா் டி.கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.