மாஞ்சாலி அம்மன் கோயில் திருவிழா
குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, சீனிவாசா நகா், கண்ணதாசன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமாஞ்சாலி அம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு ராகவேந்திரா் ஆராதனை, புதன்கிழமை அம்மனுக்கு மகா தீபாராதனை, அம்மன் திருக்காட்சி, மதியம் புற்று வாராகி அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நடைபெற்றது. மாலை தீச்சட்டி ஊா்வலம் நடைபெற்றது.
விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், ஊராட்சித் தலைவா்கள் கே.பி.சுப்பிரமணி (ராமாலை), அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா் (கொண்டசமுத்திரம்) ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், கே.ராஜ்கமல், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.விழாவையொட்டி செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்களும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மாஞ்சாலி தரணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.