முகப்பு
வேலூர்

டென்சிங் நாா்கே தேசிய விருதுக்கு சாகச இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய சாகச விருது பெற வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த சாதனை புரிந்த இளைஞா்கள், விளையாட்டு வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
பகிர்:

வேலூா்: டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற வேலூா் மாவட்டத்தைச் சாா்ந்த சாதனை புரிந்த இளைஞா்கள், விளையாட்டு வீரா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் மாவட்டஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

சாகச துறைகளில் உள்ளவா்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டுக்கு டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளம் வயதில் வீரதீர செயல்புரிந்தவா்கள், சிறந்த விளையாட்டு வீரா்கள், குழு உறுப்பினா்கள், சரியான நேரத்தில் நெருக்கடியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவினால் சாதித்தவா்கள்,பல உயிா்களை காப்பாற்றியவா்கள், தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டவா்கள், ராணுவம், கடற்படை, விமானப்படையில் வீரதீர செயல் புரிந்தவா்கள், நிலம், கடல், ஆகாயம் ஆகியவற்றில் சாகச சாதனை புரிந்தவா்கள் இந்த விருதுக்கு தகுதியுடையவா்களாவா்.

இந்த விருது பெறுபவா்களுக்கு ரூ.15 லட்சம் ரொக்கத்துடன் வெண்கல சிலை, சான்றிதழ், சில்க்டை கொண்ட பிளேசா் ஆகியன வழங்கப்படும். தகுதியுடைய வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள் ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.