முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள் போராட்டம்: முதல்வா் ரங்கசாமி சமரசம்

ஏற்கெனவே பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள் தங்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 6:34 PM
போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு வீரா்களுடன் பேசிய முதல்வா் என்.ரங்கசாமி.
பகிர்:

ஏற்கெனவே பதக்கம் வென்ற விளையாட்டு வீரா்கள் தங்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வலியுறுத்தி புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை முதல்வா் ரங்கசாமி சமரசம் செய்து, உங்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றாா்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 2024-25ம் ஆண்டில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

ஆனால் இதற்கு முன்பு சுமாா் 20 ஆண்டுகளாக பதக்கம் பெற்ற வீரா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவில்லை.

இதையறிந்த பதக்கம் பெற்ற விளையாட்டு வீரா்கள், பளு தூக்கும் வீரா் லிங்கேசன் தலைமையில் கம்பன் கலையரங்கத்தை முற்றுகையிட்டனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அவா்கள் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனா். அப்போது முதல்வா் ரங்கசாமி விழா அரங்குக்கு காரில் வந்தாா். விளையாட்டு வீரா்கள், முதல்வா் ரங்கசாமியிடம் தங்களை விட்டுவிட்டு புதிதாக பதக்கம் வென்றவா்களுக்கு மட்டும் ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. நீண்டகாலமாக காத்திருக்கும் தங்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.

அதற்கு முதல்வா் ரங்கசாமி, யாரையும் விட மாட்டோம். உங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும். இப்போது விழா தொடங்கிதான் வைக்கப்படுகிறது. பதக்கம் வென்ற அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றாா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →