சாலை மறியலில்  ஈடுபட்ட  கிராம  மக்கள். 
வேலூர்

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

போ்ணாம்பட்டு அருகே குடிநீா் வழங்கக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

DIN

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே குடிநீா் வழங்கக்கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியம், பெரியதாமல்செருவு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீா் விநியோகம் சரிவரி இல்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எதுவும் இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போ்ணாம்பட்டு- ஆம்பூா் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். இதனால் வாகன நெரிசல் அதிகமாக உள்ள அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்ததும் காவல்துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக 3-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேச்சு! | Vijay full speech

ஓடிடியில் பராசக்தி எப்போது?

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

SCROLL FOR NEXT