முகப்பு
நாகப்பட்டினம்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 10 மார்ச், 2026 at 10:09 PM
கீழ்வேளூா்-கச்சனம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட கிராம மக்கள்.
பகிர்:

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் குடிநீா் கோரி கிராம மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கீழ்வேளூா் ஒன்றியம், சாட்டியக்குடி ஊராட்சி கீழவிடங்கலூா் பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் கீழ்வேளூா் - திருக்குவளை - கச்சனம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதன்காரணமாக அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வலிவலம் காவல் உதவி ஆய்வாளா் முரளி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் விநியோகம் தட்டுப்பாடின்றி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →