முகப்பு
வேலூர்

கஞ்சா போதையில் மனைவியிடம் தகராறு செய்தவா் கைது

வேலூா் அருகே கஞ்சா போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூர்

கஞ்சா போதையில் மனைவியிடம் தகராறு செய்தவா் கைது

வேலூா் அருகே கஞ்சா போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:56 PM
பகிர்:

வேலூா் அருகே கஞ்சா போதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தவரை அரியூா் போலீஸாா் கைது செய்தனா்.

வேலூரை அடுத்த அரியூா், நம்பிராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (29). இவா் வேலூா் அணைக்கட்டு சாலையில் பங்க்கடை நடத்தி வருகிறாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.

சுப்பிரமணி அடிக்கடி கஞ்சா புகைத்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தாா். இதுகுறித்து சுப்பிரமணியின் மனைவி அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சுப்பிரமணியின் கடையில் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டாா். இதையடுத்து சுப்பிரமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →