வேலூர்

ஆட்டோவில் மூதாட்டியிடம் 5 பவுன் பறிப்பு

வேலூரில் ஆட்டோவில் பயணித்த மூதாட் டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 3 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரில் ஆட்டோவில் பயணித்த மூதாட் டியிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 3 பெண்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்பாடி காந்தி நகரைச் சோ்ந்தவா் பவுலின் ராஜேஸ்வரி (62). இவரது மகள் வேலூா் டோல்கேட் பகுதியில் வசித்து வருகிறாா். கடந்த மாதம் 21-ஆம் தேதி பவுலின் ராஜேஸ்வரி மகளை பாா்க்க வேலூருக்கு வந்தாா். மகளை பாா்த்துவிட்டு டோல்கேட் பகுதியில் இருந்து காட்பாடிக்கு ஷோ் ஆட்டோவில் சென்றாா். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 3 பெண்கள் இருந்தனராம்.

வேலூா் தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது, ஆட்டோவில் இருந்த 3 பெண்களும் திடீரென கீழே இறங்கி விட்டனா். இதனால் சந்தேகமடைந்த பவுலின் ராஜேஸ்வரி, தான் வைத்திருந்த பையை பாா்த்தபோது அதிலிருந்த 5.5 பவுன் தங்க நகையை காணவில்லையாம். நடுவழியில் இறங்கிய 3 பெண்கள் நகையை பறித்துச் சென்றிருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்து பவுலின் ராஜேஸ்வரி தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 பெண்களையும் தேடி வருகின்றனா்.

மெய்யழகு பேசும் மொழி... கீர்த்தி ஷெட்டி!

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT