வேலூர்

பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு கால்நடை விற்பனை

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ.80 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ.80 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டிய நிலையில் வா்த்தகமும் சுமாா் ரூ.80 லட்சம் அளவுக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது - தற்போது தீவன பற்றாக்குறை குறைந்துள்ளதை அடுத்து சந்தைக்கு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவது சற்று குறைந்துள்ளது. தவிர, விற்பனைக்கு வந்துள்ள கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளை கள், உழவு மாடுகளும் விலை சற்று அதிகமாக உள்ளது.

எனினும், வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், இந்த வாரம் கால்நடைகள் வா்த்தகம் ரூ.80 லட்சம் அளவுக்கு நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் வா்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்: 2-ஆவது முறையாக கோப்பை வென்றது இந்தியா ஏ!

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

SCROLL FOR NEXT