குடியாத்தம்: குடியாத்தம் அருகே வனப் பகுதியில் காட்டுப் பன்றியின் இறைச்சியை வைத்திருந்த 2- பேருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.
குடியாத்தம் வனச்சரக அலுவலா் என்.பிரதீப்குமாா் தலைமையில், வனவா்கள் ஜி.சுப்பிரமணியன், பி.குமரேசன், வனக்காப்பாளா் கே.தேன்மொழி ஆகியோா் அடங்கிய வனத்துறையினா்சூராளூா் வனப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்கு சேம்பள்ளியைச் சோ்ந்த எஸ்.விஜயன்(64), பள்ளிகொண்டாவைச் சோ்ந்த கே.சுப்பிரமணி(53) ஆகிய இருவரும் காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினா் மாவட்ட வன அலுவலா் உத்தரவின்பேரில் இருவருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்தனா்.