இலவச பொது மருத்துவ முகாமை தொடங்கி வைத்த விஐடி பல்கலைக்கழகத்தின் ரமணி பாலசுந்தரம். 
வேலூர்

காங்கேயநல்லூரில் இலவச மருத்துவ முகாம்

தினமணி செய்திச் சேவை

காங்கேயநல்லூரில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை விஐடி பல்கலைக்கழகத்தின் ரமணி பாலசுந்தரம் தொடங்கி வைத்தாா்.

காங்கேயநல்லூரில் ஸ்ரீ தத்வமஸி ஐயப்ப பக்த சபா சாா்பில் ஸ்ரீ தத்வமஸி ஐயப்ப இலவச மருத்துவ மையத்தில் வாரந்தோறும் இலவச மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி இலவச பொது மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். இதன் முதல் மருத்துவ முகாமை ரமணி பாலசுந்தரம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மருந்துகளை வழங்கினாா்.

இதில் மருத்துவா்கள் எம்.சந்திரசேகா், ஆா்.ரோஷினி, ஆா்.சங்கா் ஆகியோா் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அளித்தனா். முகாமில் ஆன்மீக பெரியோா்கள், பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தொடர் மழை: கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

நவ. 23 -இல் 49 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT