வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை (நவ.21) காலை 10 மணிக்கு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.