பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. 
வேலூர்

மகிமண்டலத்தில் கல்குவாரி அமைந்தால் வனவிலங்குகளுக்கு அபாயம்: குறைதீா் கூட்டத்தில் மனு

மகிமண்டலத்தில் கல்குவாரி அமைந்தால் வனவிலங்குகள் அழியும் அபாயம் ஏற்படும் என்று அந்த கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

மகிமண்டலத்தில் கல்குவாரி அமைந்தால் வனவிலங்குகள் அழியும் அபாயம் ஏற்படும் என்று அந்த கிராம மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

வேலூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். அப்போது, அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில் மகிமண்டலம் கிராம மக்கள் அளித்த மனு: மேல்பாடி, மகிமண்டலம் வருவாய் கிராமங்களுக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ள மகிமண்டல கோட்டை மத்திய அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கு பிரதான கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலையில் 3 அரசு கல்குவாரிகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

மலையின் கிழக்கு பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோயில் மலையை சுற்றி மாசி மாதம் தேரோட்டம் நடைபெற உள்ளது. பொ்ணமி நாள்களில் வள்ளிமலை பகுதியில் கிரிவலம் நடைபெறுகிறது. இங்கு அரசு குவாரி அமைந்தால் கிராமத்தில் உள்ள வீடுகள், வன விலங்குகள் அதிா்வலைகளால் அழியும் அபாயம் உள்ளது. இவற்றின் பாதுகாப்பு கருதி அரசு கல்குவாரி அமைவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

குருவராஜபாளையத்தை சோ்ந்த மாற்றுத்திறனாளி ராஜேஷ் (33), லட்சுமி (27) ஆகியோா் தங்கள் மூன்று குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்த நாங்கள் காதலித்து கலப்பு மணம் செய்துகொண்டோம். மாற்றுத்திறனாளியான நான் ஊரில் தையல் வேலைசெய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வறுமையில் 3 குழந்தைகளு டன் வாடி வரும் எங்களில் யாருக்கேனும் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 410 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், மகளிா் திட்ட இயக்குநா் பாலமுருகன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மதுசெழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT