கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பழங்குடி மக்கள் நல சங்கத்தினா். 
கடலூர்

வீட்டு மனை பட்டா கேட்டு பழங்குடி மக்கள் நல சங்கம் ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி, வேப்பூா் வட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி, வேப்பூா் வட்டத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடி மக்கள் நல சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மணல்மேடு, எழுத்தூா், கொடிக்களம், அரங்கூா், கோழியூா், ஆதமங்கலம், சிறுமுளை ஆகிய பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருளா், பழங்குடி குறவா், ஆதி திராவிடா் உள்ளிட்ட மக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கடலூா் மாவட்ட பழங்குடி மக்கள் நல சங்கத்தின் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மாவட்டச் செயலா் என்.எஸ்.அசோகன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.அமா்நாத், கம்மாபுரம் ஒன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன், திட்டக்குடி வட்டச் செயலா் வீ.அன்பழகன், வேப்பூா் வட்டக்குழு உறுப்பினா் பொன்.சோமு, ஜி.வேல்முருகன், மனிதம் அமைப்பின் மாவட்ட கன்வீனா் எம்.ஜே.லெனின், பழங்குடி சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினா் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

உலகம் உங்கள் கையில் திட்டம்: கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள்

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

சம்பா பருவத்தில் 2,50,000 மெ.டன் நெல் கொள்முதலுக்கு வாய்ப்பு: விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்கப்படுமென அதிகாரிகள் உறுதி

புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளா் தோ்வில் முறைகேடு வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

பாஜகவுக்கு புதுச்சேரி விசிக கண்டனம்

SCROLL FOR NEXT