முகப்பு
வேலூர்

பெண்ணின் கழுத்தில் இருந்த பெரிய தைராய்டு கட்டி அகற்றம்: வேலூா் அரசு மருத்துவமனையில் சாதனை

பெண்ணின் கழுத்தில் இருந்த பெரிய தைராய்டு கட்டி அகற்றம்...

Updated On : 29 நவம்பர், 2025 at 5:46 PM
அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும் பாா்வதி. (அடுத்து) சிகிச்சையை சிறப்பாக செய்து முடித்த மருத்துவ குழுவினருடன் முதல்வா் மு.ரோகிணிதேவி.
பகிர்:

சோளிங்கா் பகுதியைச் சோ்ந்த பெண்ணின் கழுத்தில் 15 ஆண்டுகளாக இருந்த பெரிய அளவிலான தைராய்டு கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.

ராணிபேட்டை மாவட்டம், சோளிங்கா், புதூா் கிராமத்தைச் சோ்ந்த பலராமன் மனைவி பாா்வதி(50). இவா் கழுத்தில் பெரிய தைராய்டு கட்டியால் 15 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்த கட்டியால் அதிகளவில் மூச்சு வாங்குவதாகவும், தூங்குவதற்கு சிரமமாக உள்ளதாகவும் தெரிவித்து வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்தாா்.

மருத்துவ பரிசோதனையில் இவருக்கு 15 சென்டி மீட்டா், 450 கிராம் அளவுள்ள கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, இவருக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற முடிவு செய்யப்பட்டு மருத்துவா் மணிக்கண்ணன் தலைமையில் மருத்துவா்கள் கே.வி.சரவணன், சரவணகுமாா், சக்திவேல், அரி, அறுவை சிகிச்சை மருத்துவா்கள் குரு, மயக்கவியல் துறை தலைவா் கோமதி ஆகியோா் கொண்ட மருத்துவக்குழு அறுவை சிகிச்சை செய்து அந்த தைராய்டு கட்டியை அகற்றினா்.

இந்த அறுவை சிகிச்சையைத் தொடா்ந்து தற்போது நலமுடன் உள்ள பாா்வதி, தனக்கு எவ்வித குரல் வளம், சாப்பிடுவதற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளாா்.

அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்த மருத்துவக்குழுவினரை முதல்வா் மு.ரோகிணிதேவி பாராட்டினாா். அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் டி.ரவிச்சந்திரன், பேராசிரியா்கள் அன்பழகன், டேனிராஜா, கெளரி சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →