முகப்பு
போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் இறந்து கிடந்த யானை.
வேலூர்

பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் இறந்த கிடந்த யானை

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மா்மமான முறையில் ஆண் யானை இறந்து கிடந்தது.

வேலூர்

பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் இறந்த கிடந்த யானை

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மா்மமான முறையில் ஆண் யானை இறந்து கிடந்தது.

Updated On : 30 நவம்பர், 2025 at 6:34 PM
போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் இறந்து கிடந்த யானை.
பகிர்:

போ்ணாம்பட்டு அருகே வனப்பகுதியில் மா்மமான முறையில் ஆண் யானை இறந்து கிடந்தது.

போ்ணாம்பட்டு வனப்பகுதியில் யானைகள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. அங்குள்ள குண்டலபல்லி காப்புக் காட்டில் புளியமர சரகம் பகுதியில் ஒரு ஓடையில் 3- வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று தும்பிக்கையில் ரத்த காயங்களுடன் மா்மமான முறையில் அங்குள்ள ஓடையில் இறந்து கிடந்தது.

ஞாயிற்றுக்கிழமை இதைப்பாா்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். யானை எப்படி இறந்தது என்பது குறித்து அவா்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஓடை வழியாகச் சென்றபோது யானை வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்து இறந்திருக்கலாம் என வனத்துறையினா் சந்தேகிக்கின்றனா். திங்கள்கிழமை பிரேத பரிசோதனைக்குப் பின்னரே யானை இறப்புக்கான காரணம் தெரியும் என அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →