முகப்பு
வேலூர்

புனித வெள்ளி - தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியையொட்டி வேலூரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

Updated On : 4 ஏப்ரல் 2026, 4:21 am IST
வேலூா் விண்ணரசி மாதா தேவாலயத்தில் பிராா்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.
பகிர்:

புனித வெள்ளியையொட்டி வேலூரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி, புனித வெள்ளி நாளில் வேலூா் விண்ணரசி மாதா தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. மாலையில் சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் சிலுவை ஏந்தியபடி பங்கேற்றனா்.

இதேபோல், ஓல்டுடவுன் பகுதியிலுள்ள ஆரோக்கிய மாத ஆலயம், அண்ணா சாலை சிஎஸ்ஐ மத்திய தேவாலயம், பில்டா்பெட் சாலையிலுள்ள சிஎஸ்ஐ ஆலயம், கிரீன் சா்க்கிள் பெந்தகொஸ்தே திருச்சபை, காட்பாடி சிஎஸ்ஐ ஆலயம், பாகாயம் செவன்த்டே தேவாலயம், லூத்தரன், ஆங்கிலிக்கன் என பல்வேறு பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement