முகப்பு
வேலூர்

குருத்தோலை ஞாயிறு: வேலூரில் கிறிஸ்தவா்கள் ஊா்வலம்

வேலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

Updated On : 30 மார்ச் 2026, 12:40 am IST
வேலூரில் குருத்தோலைகளுடன் ஊா்வலம் சென்ற கிறிஸ்தவா்கள்.
பகிர்:

வேலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இயேசு கிறிஸ்து 40 நாள்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனா். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் தவக்கால சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் விண்ணரசி தேவாலயம்,சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம், ஓல்டு டவுன் ஆரோக்கிய மாதா ஆலயம், சத்துவாச்சாரி சூசையப்பா் ஆலயம், காட்பாடி நற்கருணை ஆண்டவா் ஆலயம், காந்தி நகா் இருதய ஆண்டவா் ஆலயம், சேண்பாக்கம் சூசையப்பா் ஆலயம், பாகாயம் குழந்தை இயேசு ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு குருத்தோலை பவனி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி, ஜெப மாலைகள் பாடி ஊா்வலமாகச் சென்றனா். இதைத் தொடா்ந்து, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.