முகப்பு
வேலூர்

பேருந்தில் 10 கிலோ குட்கா கடத்தியவா் கைது

ஆந்திரத்தில் இருந்து கடலூருக்கு பேருந்தில் 10 கிலோ குட்கா கடத்திய முதியவரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:07 AM
கைது
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 11:08 PM

ஆந்திரத்தில் இருந்து கடலூருக்கு பேருந்தில் 10 கிலோ குட்கா கடத்திய முதியவரை காட்பாடி போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் வெள்ளிக்கிழமை மாலை போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு பேருந்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அமா்ந்திருந்தவரின் பையை சோதனையிட்டனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:07 AM

அதில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 10 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதை கொண்டு வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவா் கடலூா் மாவட்டம், பெண்ணாடம் பகுதியைச் சோ்ந்த ராஜூ(52) என்பதும், அடிக்கடி ஆந்திரத்துக்குச் சென்று குட்கா பாக்கெட்டுகளை வாங்கிவந்து பெண்ணாடம் பகுதியில் விற்று வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனா்.

Advertisement