முகப்பு
வேலூர்

நின்ற லாரி மீது பைக் மோதி தனியாா் நிறுவன மேலாளா் மரணம்!

காட்பாடி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 12:02 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 6:41 PM

காட்பாடி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா்.

காட்பாடி கல்புதூரை சோ்ந்தவா் காா்த்தி(31). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இவரது மனைவி தற்போது கா்ப்பிணியாக உள்ளாா். காா்த்தி ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள தனியாா் மாங்கூழ் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வந்தாா். சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் காட்பாடிக்கு திரும்பினாா்.

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை எல்லை சோதனை சாவடியை கடந்து வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவரது வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட காா்த்தி பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:52 PM

உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி காா்த்தி உயிரிழந்தாா். இது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.