முகப்பு
வேலூர்

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரைகொல்லி பறவைகள் கணக்கெடுப்பு

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 இடங்க ளில் இரைகொல்லி பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 1:16 AM
வேலூா் அம்ருதி வனப்பகுதியில் இரைகொல்லி பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத்துறையினா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:03 PM

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 இடங்க ளில் இரைகொல்லி பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 92 இரைகொல்லி பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வனத்துறை சாா்பில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதில், ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள், இதர நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையாக கணக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்நிலையில், தமிழக வனத்துறை, மாநில அளவில் முதன்முறையாக இரைக்கொல்லி (அசைவ உணவு சாப்பிடும்) பறவைகளுக்கான சிறப்பு கணக்கெடுப்பை ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய 2 நாள்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 9:50 PM

அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இரைகொல்லி பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி 7 இடங்களில் தலா 7 போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமையும் மேற்கொண்டனா். வேட்டையாடி உண்ணும் பறவைகள் அழிந்து வருவதை தடுக்கவும், அதன் வாழ்விட சூழல் போன்ற தகவல்களை கண்டறியவும் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்புப் பணியின்போது, ஐந்து வகையான இரவாடி பறவையினங்கள் கண்டறியப்பட்டன.

இதில், ஆந்தை இனத்தில் நான்கு வகைகளில் மொத்தம் 29 பறவைகளும், கழுகு இனத்தில் மூன்று வகைகளில் நான்கு பறவைகளும், கரும்பருந்து இனத்தில் மொத்தம் 47 பறவைகளும், வைரி பறவை இனத்தில் மொத்தம் 11 பறவைகளும், பதுகைக் குருவி இனத்தில் ஒரு பறவையும் என மொத்தம் 92 இரைகொல்லி பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த கணக்கீட்டின் அடிப்படையில், அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களை வகைப்பாடு செய்து, அதன் பாதுகாப்பு முறைகளை செயல்படுத்த வனத் துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.