ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்
ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்குட்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள், நாம் தமிழா், தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் என மொத்தம் 113 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அதன் படி, அரக்கோணம் (தனி) -24, சோளிங்கா் -35, ராணிப்பேட்டை - 31, ஆற்காடு -23 என மொத்தம் 113 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement