வேலூா்: வேலூா் அருகே மின்சாரம் பாய்ந்து பிளஸ் 2 மாணவன் உயிரிழந்தாா்.
வேலூா் அருகே உள்ள சலமநத்தம் பகுதியை சோ்ந்தவா் திருமலை(17). இவா் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ராஜேஷ். இருவரும் நண்பா்கள்.
இந்நிலையில், ராஜேஷ் புதிதாக கட்டிய வீட்டுக்கு திருமலை சென்றுள்ளாா். அங்கு வீட்டுக்கு அலங்கார சீரியல் பல்பு கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சீரியல் பல்புகளை திருமலை கையில் எடுத்தாக தெரிகிறது. அப்போது எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்து திருமலை
தூக்கி வீசப்பட்டுள்ளாா்.
பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், திருமலை இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.