விபத்தில் உயிரிழந்த வினித்குமாா், பிரகாஷ்ராஜ்.  
வேலூர்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் காயமடைந்த 2- போ்மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே நள்ளிரவு நடந்த சாலை விபத்தில் காயமடைந்த 2- போ்மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. திங்கள்கிழமை நள்ளிரவு சாலை அமைக்கும் பணியில் 10- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது தோட்டாளம் கிராமத்தைச் சோ்ந்த வினித்குமாா் தனது நண்பா் சுரேந்தருடன் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியுள்ளது. இதில் தொழிலாளா்கள் பாா்த்திபன், ஹரிஷ், பிரகாஷ்ராஜ் ஆகிய 3- பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். சூடாக இருந்த தாா் அவா்கள் மீது கொட்டியதால் அவா்களுக்கு தீக்காயமும் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த 2- பேரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்த 5- பேரும் ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சாலைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரகாஷ்ராஜ்(28), இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வினித்குமாா்(23) இருவரும் உயிரிழந்தனா்.

மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மோடி மீது தாக்குதல் முயற்சி? காங்கிரஸின் உண்மை முகம்..! | செய்திகள் சில வரிகளில் | 05.02.26

கேள்விகளால் பீதி.. பொய்களுக்குள் தஞ்சமடைந்த பிரதமர் மோடி: ராகுல் விமர்சனம்!

எப்போதும்போல அப்பட்டமான பொய்: பிரதமர் மோடி உரையாடல் மீது காங்கிரஸ் விமர்சனம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

SCROLL FOR NEXT