வேலூர்

கட்டட மேஸ்திரி கல்லால் தாக்கி கொலை

வேலூா் சத்துவாச்சாரியில் கட்டட மேஸ்திரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் சத்துவாச்சாரியில் கட்டட மேஸ்திரி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

வேலூா் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சோ்ந்த ராமு(43), கட்டட மேஸ்திரி. இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா். மது பழக்கத்துக்கு அடிமையான ராமு, தினமும் மதுஅருந்திவிட்டு அப்பகுதியில் உள்ளவா்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், புதன்கிழமையும் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளாா்.

பின்னா், வீட்டின் வெளியே சாலையோரம் ராமு படுத்து தூங்கியுள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை அவ்வழியாக சென்றவா்கள் பாா்த்தபோது, ராமு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளாா்.

இதுகுறித்து அவா்கள் சத்துவாச்சாரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். தொடா்ந்து, ஏஎஸ்பி தனுஷ்குமாரும் நேரில் விசாரணை நடத்தினாா்.

இதில், ராமு கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் அப்பகுதியைச் சோ்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: நீதிமன்றத்தில் போலீஸாா் முன்னிலையாக உத்தரவு

வன்கொடுமை தடுப்புச் சட்ட புகாா்கள் - சிறப்பு கண்காணிப்புப் பிரிவு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

எஸ்.ஐ. மீதான புகாா்: டி.எஸ்.பி. விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சூரியனாா்கோயிலில் 30-ஆவது ஆதீனம் பொறுப்பேற்பு

செய்தியாளா் தாக்கப்பட்ட சம்பவம் - திமுக எம்.எல்.ஏ., அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் சரண்

SCROLL FOR NEXT