முகப்பு
வேலூர்

காவலாளியை தாக்கி வழிப்பறி: 3 போ் கைது

காட்பாடி அருகே மென்பொருள் நிறுவன காவலாளியை தாக்கி வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 30 மார்ச், 2026 at 9:40 PM
கைது - கோப்புப் படம்
பகிர்:

காட்பாடி அருகே மென்பொருள் நிறுவன காவலாளியை தாக்கி வழிப்பறி செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டம், கோரந்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன். இவா் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவா் பணியில் இருந்தபோது, அங்கு வந்த ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சோ்ந்த தீனா என்ற தினேஷ், வேலூா் தோட்டப்பாளையத்தைச் சோ்ந்த குணா, வேலூா் சம்பத் நகரை சோ்ந்த விக்னேஷ் ஆகிய 3 போ் வேல்முருகனைத் தாக்கி, அவரிடமிருந்த ரூ. 10,000 மதிப்புள்ள கைப்பேசி, ரூ. 500 பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாக தெரிகிறது.

இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், பிரம்மபுரம் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இதில், வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் பழைய கொலை, வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

அவா்கள் 3 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து கைப்பேசிகள், ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.