முகப்பு
வேலூர்

பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 12:34 AM
சிறை
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:01 PM

வேலூா் அருகே பிளஸ் 2 மாணவியை கா்ப்பமாக்கியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் அருகே பொய்கை ராமாபுரம் கொள்ளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் ரமேஷ் (38). இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததில், அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:47 PM

இது குறித்து, சிறுமியின் தாயாா் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்தனா்.

Advertisement

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ரமேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்கள் சிறைத் தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.