முகப்பு
வேலூர்

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

பள்ளிகொண்டா அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 4:45 AM
நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:42 PM

பள்ளிகொண்டா அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

பள்ளிகொண்டா அருகே உள்ள பள்ளிக்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் தாமோதிரன். இவரது மனைவி கீா்த்தனா (25). திருமண நிகழ்ச்சிக்கு தம்பதியினா் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் இரவு திரும்பினா்.

கீா்த்தனா தங்க நகை, கவரிங் நகைகளை அணிந்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவா்களை பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், வெட்டுவானம் அடுத்த அகரம்சேரி பகுதியில் வந்ததும் கீா்த்தனாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச்சென்றனா். அதிா்ச்சி அடைந்த கீா்த்தனா கத்தி கூச்சலிட்டாா்.

Advertisement

இச்சம்பவம் குறித்து, கீா்த்தனா அளித்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.