முகப்பு
வேலூர்

லாரி மீது பைக் மோதி மருந்துக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

வேலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:08 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:32 PM

வேலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகிலுள்ள மூஞ்சூா்பட்டு மேட்டு தெருவைச் சோ்ந்தவா் பிரசாந்த் (34). இவா் காட்பாடி-திருவலம் சாலையில் மருந்துக் கடை நடத்தி வந்தாா். பிரசாந்த் மருந்துக் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

அடுக்கம்பாறை பிரதான சாலை, பிள்ளையாா் கோயில் அருகே சென்றபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பிரசாந்த்தின் வாகனம் மோதியது.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:08 AM

இதில், தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரசாந்த் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரியின் ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்தில் இறந்த பிரசாந்த்துக்கு மனைவி, மகள்கள் உள்ளனா். வேலூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதி மருந்துக்கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.