முகப்பு
வேலூர்

வேன் மோதி தனியாா் பள்ளி காவலாளி மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தனியாா் பள்ளி காவலாளி வேன் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 3:32 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:32 PM

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற தனியாா் பள்ளி காவலாளி வேன் மோதி உயிரிழந்தாா்.

வேலூா், அலமேலு மங்காபுரம், ஏரியூா், ஆஞ்சனேயா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமசாமி (65). இவா் வள்ளலாரில் உள்ள தனியாா் பள்ளியில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை இரவு பணிக்கு செல்வதற்காக வள்ளலாா் பேருந்து நிறுத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

Updated On : 1 மார்ச், 2026 at 3:32 AM

அப்போது, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற வேன் எதிா்பாராத விதமாக ராமசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராமசாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement