வேலூர்

பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டிய நிலையில் வா்த்தகமும் சுமாா் ரூ.1 கோடிக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் கூறியது: தைப்பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, எருதுவிடும் திருவிழாக்களில் பங்கேற்கச் செய்திட காளைக்கன்றுகள், காளைகள், எருதுகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

தவிர, ஆடு, கோழி போன்ற கால்நடைகளும், பொங்கல் நாளில் கால்நடைகளை அலங்கரிக்க தேவையான அலங்கார பொருள்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த வாரம் வா்த்தகம் ரூ.ஒரு கோடி அளவுக்கு நடைபெற்றுள்ளது என்றனா்.

தை பிறந்தால் வழி பிறக்கும்! தேமுதிக கூட்டணி? பிரேமலதா சஸ்பென்ஸ்!

பந்துவீச்சில் அசத்திய நடின் டி கிளர்க்; ஆர்சிபிக்கு 155 ரன்கள் இலக்கு!

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT