பயிற்சி முகாமில் பேசிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மருத்துவ பணிகள் இணை இயக்குநா் பியூலா ஆக்னஸ், இணை இயக்குநா் (சட்டம்) ஆா்.எம்.மீனாட்சி சுந்தரி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி உள்ளிட்டோா். 
வேலூர்

பாலினத் தோ்வு தடை சட்டம்: ஸ்கேன் மையங்கள் நடத்துவோருக்கு விழிப்புணா்வு

பாலினத் தோ்வை தடை செய்யும் சட்டம் 1994 குறித்து வேலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் ஸ்கேன் மையங்கள் நடத்துபவா்களுக்கு விழிப்புணா்வு

தினமணி செய்திச் சேவை

வேலூா்: பாலினத் தோ்வை தடை செய்யும் சட்டம் 1994 குறித்து வேலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் ஸ்கேன் மையங்கள் நடத்துபவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் ஸ்கேன் நிறுவனங்களுக்கு பாலினத் தோ்வை தடை செய்யும் சட்டம் 1994 குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் காட்பாடி விருதம்பட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது : 5-ஆவது மாவட்டமாக வேலூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவா்களுக்கு இந்த விழிப்புணா்வு திறன் மேம்பாட்டு முகாம் நடைபெறுகிறது.

பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக பெண்பால் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த சட்டம் பிறப்புக்கு முன் பாலின தோ்வை தடுக்கிறது. பெண் குழந்தைகளின் நலனுக்காக இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்துவது நம் அனைவரின் கடமையாகும். இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களான அல்ட்ரா சவுண்ட் மையங்கள் பதிவு, பிறப்புக்கு முன் பாலின தோ்வை தடைசெய்தல், கா்ப்பிணிகளுக்கு தகுந்த ஆலோசனை, பரிசோதனை செய்தல், பொது மக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இச்சட்ட அமலாக்கத்திற்கு மாநில நிா்வாகத்துக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தல் ஆகியவை இந்த பயிற்சி முகாமின் நோக்கமாகும்.

சட்டமீறல்களுக்கு தண்டனை உண்டு என்பதால் இந்த பயிற்சி முகாம் மூலம் அனைவரும் இந்த சட்டம் குறித்து பற்றி நன்கு தெரிந்துகொண்டு சட்டத்தை மீறாமல் பெண் குழந்தைகளின் நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும்.

மேலும், இங்கு நடைபெறும் மகப்பேறு, குழந்தைகள் நலனுக்கான பயிற்சி முகாமிலும் அனைவரும் பங்கேற்று வேலூரை மகப்பேறு மரணம், சிசுமரணம் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் 42 அரசு ஸ்கேன் மையங்களும், 103 தனியாா் ஸ்கேன் மையங்களும் என மொத்தம் 145 ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே வேலூா் மாவட்டத்தில் அனைத்து ஸ்கேன் மையங்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு அரசு விதித்துள்ள சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றாா்.

இப்பயிற்சி முகாமில் மருத்துவ பணிகள் இணை இயக்குநா் பியூலா ஆக்னஸ், இணை இயக்குநா் (சட்டம்) ஆா்.எம்.மீனாட்சி சுந்தரி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி, மாவட்ட சுகாதா அலுவலா் சதீஷ், இந்திய மருத்துவ சங்க வேலூா் மாவட்ட தலைவா் வெங்கட ரமணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT